'I hope this is good for the party and the country' - shocked Joe Biden

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது. இந்நிலையில் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போதுஅறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 'மிஞ்சியிருக்கும் தனது பதவி காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்றுவேன்; இதுவே எனது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்' என அறிக்கை வாயிலாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Advertisment