publive-image

Advertisment

அமெரிக்காவில் இந்தியர்களை அவதூறாக பேசிய அமெரிக்க - மெக்ஸிகன் பெண் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் டேக்ஸாஸ் நகரில் அமெரிக்க வாழ் மெக்ஸிகன் பெண்ணான எஸ்மெரல்டா அப்டன் என்பவரை டெக்சாஸ் நகர காவல்துறை வியாழன் அன்று கைது செய்துள்ளது.

அமெரிக்கா டெக்சாஸ் நகரில் இந்தியர்களை தரக்குறைவாக பேசியதற்காகவும் 4 இந்தியப் பெண்களை தாக்கியதற்காகவும் அவரின் மீது தாக்குதல் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் 10000 டாலர் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பதிவில் நிறைவேற்றுமையின் அடிப்படையில் இந்தியர்களை விமர்சித்து அமெரிக்காவை சீரழிக்க வந்துள்ளீர்கள் எனக் கூறியுள்ளார். இந்தியப் பெண் இதை வீடியோவாக பதிவு செய்ய முதலில் செல்போனைப்பறிக்க முயன்று பின் வீடியோ எடுத்த பெண்ணை தக்கியுள்ளார்.

பின் தன் பையில் இருந்து ஆயுதங்களை எடுக்க முயன்றுள்ளார். அதற்குள் இந்தியப் பெண் 911 எண்ணிற்கு அழைத்து காவல்துறைக்கு தெரிவிக்க சில நிமிடங்களில் காவல்துறையினர் அங்கு வந்தனர். அதுக்கு முன் அந்த அமெரிக்க வாழ் மெக்ஸிகன் பெண் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து காவல்துறை அங்கு வந்து புகார் பெற்றுக்கொண்ட நிலையில் 20 மணி நேரம் கழித்து அவரை கைது செய்தது.