publive-image

அமெரிக்காவின் டென்னசியைச் சேர்ந்த கேசி எனும் பெண், சீன் என்பவரைக் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் ஆனால் சிறிது காலத்திலேயே சீன் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதன் பின்னர் சீனின் உடல் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தியை கேசியிடம் கொடுத்தனர்.

Advertisment

தன் கணவர் மீது மிகுந்த அன்பு கொண்ட கேசி, அவரது அஸ்தியைச் செல்லும் இடங்களுக்கெல்லாம் கொண்டு சென்றார். மேலும் தினமும் தூங்கும்போதும் கூட தனது கணவரின் அஸ்தியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவார். ஒரு நாள் தனது கணவரின் சாம்பலைக் கலசத்திற்கு மாற்றம் செய்யும் பொழுது கேசியின் கைகளில் கணவரின் சாம்பல் சிதறியது. அதனையடுத்து அந்த சாம்பலைத் துடைக்க விரும்பாத கேசி அதனைத் தனது நாவினால் சுவைத்துள்ளார். அதிலிருந்து அந்த சாம்பலைச் சுவைப்பதைக் கட்டுப்படுத்த முடியாத கேசி தினமும் குறைந்தது ஐந்து முறையாவது அந்த சாம்பலைச் சுவைக்கத் தொடங்கியுள்ளார்.

Advertisment

அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியில் இவரின் இந்த வினோதமான செயல் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தனது செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அவர் தெரிவித்ததாவது, “இது (அஸ்தி) என்னுடைய கணவர். அவரை அழிக்க விரும்பவில்லை. அதனால் அவரை சுவைக்க ஆரம்பித்தேன். கடந்த இரண்டு மாதங்களாக இந்த செயலை செய்து வருகிறேன். என்னால் அதனை நிறுத்தமுடியவில்லை. அது மணல் போன்று இருந்தாலும் அந்த சுவை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் ஏற்கனவே ஒரு முறை இழந்துவிட்டேன். இந்த செயலால் மீண்டும் அவரை இழக்க எனக்கு மனம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பழக்கத்தால் அவர் தனது உடல் எடையில் 19கிலோ குறைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.