Skip to main content

ஐ.பி.எல் கொண்டாட்டமாக ஹாட்ஸ்டார் அறிவித்த அதிரடி சலுகை!!!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

hotstar

 

 

ஐபிஎல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹாட்ஸ்டார் நிறுவனம், புதிய வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

 

ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை தன்னுடைய செயலி மூலம் நேரலையாக ஒளிபரப்பும் உரிமையைக் கொண்டுள்ளது. இன்று 13-வ து ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தொடங்க இருக்கிறது. சென்னை மற்றும் மும்பை அணிகள் இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஐபிஎல் தொடரைக் கொண்டாடும் விதமாக புதிய வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அதிரடியான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

 

அதன்படி, புதிய பயனாளர் ஒரு வருடத்திற்கான (VIP) சந்தா தொகையை செலுத்தும்போது, கூடுதலாக ஒரு மாத காலம் இலவசமாக பயன்படுத்தும் உரிமையை அளித்துள்ளது. வழக்கமாக ஒரு வருடத்திற்கான (VIP) சந்தா தொகையை செலுத்தும்போது, 12 மாத காலம் மட்டுமே பயன்படுத்த முடியும். புதிய வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் கவர்ந்திழுக்கும் விதமாக வெளியிட்டுள்ள இந்த சலுகையானது இந்த வாரத்தின் இறுதி நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கான (VIP) சந்தா தொகையானது இந்திய மதிப்பில் 399 ரூபாய் ஆகும்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

யோகி பாபுவின் ‘சட்னி - சாம்பார்’ சீரிஸின் டீசர் வெளியீடு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Teaser release of Yogi Babu's 'Chatni - Sambar' series!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், உருவான ‘சட்னி - சாம்பார்’ சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது. இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான பாணியில் சிரிக்க வைக்கும் வகையில் கலக்கலான காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் கதை, இரண்டு உணவகங்களைச் சுற்றி நகர்கிறது. முதலாவது நிழல்கள் ரவியின் குடும்பத்திற்குச் சொந்தமான ‘அமுதா கஃபே’ என்ற பாரம்பரிய ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு கிடைக்கும் சுவையான சாம்பாருக்காகவே திரும்பத் திரும்ப ஹோட்டலுக்கு வருகை தருகிறார்கள். அடுத்ததாக யோகி பாபு தள்ளு வண்டியில் நடத்தும் ஒரு சிறிய சாலையோர உணவகமான ‘அமுதா உணவகம்’. இங்குள்ள சட்னிக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த இரு உணவகங்களுக்கு இடையேயான போட்டியை மையப்படுத்தியே இந்த சீரிஸ் அமைந்துள்ளது.  

ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து  நடிக்கிறார்.  மேலும், இந்த சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த சீரிஸிற்கு, பிச்சைக்காரன் மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டேநேஷனல் தயாரிப்பில் உருவாகும், இந்த சீரிஸிற்கு, இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ்  பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் வசனங்கள் எழுதியுள்ளார். கலை இயக்கம் கே. கதிர் செய்ய, எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

Next Story

சுந்தர்.சி-யின் அரண்மனை 4; ஓடிடி அப்டேட்

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
sundar c aranmanai 4 ott update

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆன்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. 

'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை-4 படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அப்போது கடந்த பொங்கலன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு கடந்த மே 3ஆம் தேதி வெளியானது. 

ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பைப் பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

The website encountered an unexpected error. Please try again later.