Skip to main content

ஹெலிகாப்டரில் பறந்த கொரில்லா... காரணம் இதுதான்!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020
jhkகொரில்லா ஒன்றை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சை அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் விலங்கியல் பூங்கா அந்த நாட்டில் உள்ள பூங்காக்களிலேயே பெரிய அளவில் உள்ள பூங்கா ஆகும். பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் உடைய அந்த பூங்காவில் கொரில்லா ஒன்றுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் தும்பல் இருந்தது. அங்குள்ள விலங்கியல் மருந்துவர்கள் அதற்கு சிகிச்சை வழங்கியும் அது சரியாகவில்லை. 


இதனால் குழப்பமான மருத்துவர்கள் அதனை 64 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அங்குதான் 200 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட விலங்கினங்களை சிடி ஸ்கேன் செய்யும் இயந்திரம் உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டு, கொரில்லா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரில்லாவின் மூக்கில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 9ம் தேதி கொரில்லாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாதுகாவலரின் மடியிலேயே உயிரைவிட்ட பிரபலமான மனித குரங்கு!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Gorilla dead in the lap of the defender

 

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, கொரில்லா வகை குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆயுதம் ஏந்திய படையினரால் கொல்லப்பட்ட தன்னுடைய தாயின் உடலைவிட்டு நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்த நடாகாஷியை இரண்டு மாத குட்டியாக விருங்கா வனத்துறையினர் மீட்டு கொண்டு வந்தனர். அன்றைய பொழுதியில் இருந்து 14 வருடங்கள் நடாகாஷியை மேத்யூ ஷவாமு பராமரித்து வந்தார்.

 

காங்கோ நாட்டில் அமைந்துள்ள விருங்கா தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்ததது ஆதரவற்ற கொரில்லாவான நடாகாஷி  மற்றும் மடாபிஷி. இங்கு வனத்துறை ஊழியராக பணியாற்றும் மேத்யூ ஷவாமு, என்பவர் கொரில்லாக்கள் குட்டிகளாக இருக்கும்போதே அவற்றுடன் விதவிதமாக ‘செல்ஃபி’ எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மேத்யூ ஷவாமு அந்த கொரில்லாக்களுடன் எடுத்த ‘செல்ஃபி’ படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த படம் உலகம் முழுவதும் வேகமாக வைரலானது. எப்போதும் தன்னுடைய பாதுகாவலருடனே இருக்கும் நடாகாஷி தொடர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த கொரில்லா நடாகாஷி, தனது பாதுகாவலர் மேத்யூ ஷவாமு மடியிலேயே உயிரிழந்தது.

 

 


 

Next Story

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கொரில்லா...

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

நடிகர் விஜய்யின் 45வது பிறந்தநாள் இன்று, இதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் #HBDEminentVijay என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது மிக வைரலாகி ட்விட்டர் உலக ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. 
 

gorilla

 

 

இதனையடுத்து விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயரையும் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்திருந்தார். அறிவித்ததைபோல் ஆறு மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அந்த போஸ்டரில் வயதான விஜய் மற்றும் கால்பந்தாட்ட வீரர் போன்ற இளம் விஜய் என்று இரு தோற்றங்களில் இருக்கிறார் விஜய். முன்பே தகவல் வெளியானது போல இப்படத்திற்கு  ‘பிகில்’ என்றே பெயரிட்டுள்ளனர்.
 

பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விஜய்க்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜீவா நடித்திருக்கும் கொரில்லா படக்குழு,  நேற்று வெளியான பிகில் படத்தின் இரண்டாவது லுக்கை கொரில்லா பார்த்து ரசிப்பதுபோல வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

முன்னதாக ஹிந்தி எதிர்ப்பை காட்டும் விதமாக இப்படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

The website encountered an unexpected error. Please try again later.