george floyd

கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர்,மினியாபோலிஸ் நகரபோலீஸாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும்தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

Advertisment

இந்தநிலையில்மினியாபோலிஸ் நகர நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், நகர நிர்வாகம், அதிகாரிகளுக்கு தடுப்பு நடவடிக்கைக்கான நுணுக்கங்களைக் கற்றுத்தரவில்லை எனவும், மோசமான பின்னணியைக் கொண்ட அதிகாரிகளைநகர நிர்வாகம் பணியிலிருந்து நீக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில்ஜார்ஜ் ப்ளாய்ட்டுக்குஇழப்பீடாக 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க மினியாபோலிஸ் நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 196 கோடியாகும். இந்த இழப்பீடு குறித்து ஜார்ஜ் ப்ளாய்ட்டின் குடும்ப வழக்கறிஞர் கூறுகையில், “இது கறுப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிரான ஒன்றாகவும், கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியம் என்பதைக் கூறும் வலுவான செய்தியாகஇருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.