george floyds daughter viral video

ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்காவில் நாளுக்குநாள் வலுத்துவரும் நிலையில், ஜார்ஜ் பிளாய்டு தனது ஆறு வயது விளையாடும் வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது.

Advertisment

Advertisment

அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற நபர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த பத்து நாட்களாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், உலகம் முழுவதிலும் இருந்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது. இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டு தனது ஆறு வயது மகளுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் பரவி பலரையும் கலங்க வைத்துள்ளது. ஜார்ஜ் பிளாய்டு தனது மகளைத் தலையில் சுமந்த படி சுற்றி விளையாடும் அந்த வீடியோவில், "Dad changed the world" என அந்தச் சிறுமி தனது மழலை மொழியில் மகிழ்வோடு கூறுவது காண்போரை மனம் உருகச் செய்துள்ளது.