Skip to main content

ஒருவேளை உணவுக்கு நான்கு கிலோமீட்டர் க்யூ... அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

four kilometer long queue for food in south africa

 

தொண்டு நிறுவனம் வழங்கிய உணவைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கும் மேலான வரிசையில் நின்ற சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவின் பிரிடோரியா நகரத்தில் அருகாமையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாகக் குடியேறி கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக இந்த மக்களுக்கு வருமானம் இல்லாத நிலையில், இவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவ தென்னாப்பிரிக்க அரசாங்கம் முன்வரவில்லை. இதனையடுத்து அங்குள்ள தன்னார்வலர் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த மக்களுக்கு உணவு வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அண்மையில் சேவை அமைப்பு ஒன்று அவர்களுக்கு உணவு வழங்கியது. அப்போது அப்பகுதியில் உணவுவேண்டி ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் குவிய ஆரம்பித்தது. சுமார் நான்கு கிலோமீட்டருக்கு மேல் நீளமான வரிசையில் மக்கள் உணவுக்காகக் காத்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உலக அரங்கில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்தில், அடித்தட்டு மக்களுக்கு உதவ அரசாங்கங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மோசமான சாதனையில் யார் முதலிடம்? - போட்டி போட்ட இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Who on top for worst achievment India and South Africa team to compete

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் பொட்டியில் வெற்றி பெற்று 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. காயம் காரணமாக பவுமா விளையாடாத நிலையில், எல்கர் அணிக்கு தலைமை தாங்கினார். டாஸ் வென்ற எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மார்க்ரம் 2 ரன்னிலும், கேப்டன் எல்கர் 4 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ஜொர்ஸி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் பெடிங்காம் 12, வெர்ரெய்ன் 15 தவிர இரட்டை இலக்கத்தை தாண்டாமல் அனைத்து வீரர்களும் பெவிலியன் திரும்பினர்.

தென் ஆப்பிரிக்க அணி 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன்கள் எடுத்த அணி என்கிற மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி மீண்டும் சொதப்பினார். கேப்டன் ரோஹித், கில் இணை ஓரளவு நிலைத்து ஆடியது. ரோஹித் 39 ரன்களும், கில் 36 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கோலி சிறப்பாக விளையாடிய நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் டக் அவுட் ஆக, ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது. 153-4 என இருந்த இந்திய அணி 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஒரே ரன்னுக்கு (153) 6 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் இழந்த அணி எனும் மோசமான சாதனையைப் படைத்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, இங்கிடி, பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் எல்கர் 12 ரன்களுக்கும், ஜொர்ஸி ரன்னிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மார்க்ரம் 36 ரன்களுடனும், பெடிங்காம் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

- வெ.அருண்குமார்