Skip to main content

"மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது" - கைதுக்குப் பின் டிரம்ப் பேச்சு!

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

former us president donald trump speech front his supporters

 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து, அவருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மான்ஹட்டன் கிராண்ட் ஜூரி, ட்ரம்ப் மீதான இந்த கிரிமினல் குற்றச்சாட்டை முன் வைத்தது.

 

இவ்வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்தார். தொடர்ந்து ட்ரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால் பரபரப்பு உண்டானது. இந்நிலையில் நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் லோயர் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்ட் டிரம்ப், நீதிமன்றத்திற்கு வெளியே நின்ற ஆதரவாளர்களிடம் கையசைத்து விட்டு ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்ற நிலையில்  கைது செய்யப்பட்டார்.

 

விசாரணை முடிந்த பிறகு தனது ஆதரவாளர்களிடம் பேசுகையில், "எனக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் நிரபராதி. நாட்டை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து பயப்படாமல் நாட்டை காப்பாற்ற நினைத்தது ஒன்றுதான் நான் செய்த ஒரே குற்றமாகும். தற்போது போலி வழக்கு விசாரணை ஒன்றை எதிர்கொண்டுள்ளேன். நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே இந்த வழக்குகள் விசாரணைகள் எல்லாம் நடைபெறுகின்றன. நான் முன்பை விட தற்போது உறுதியாக இருக்கிறேன்.

 

நாட்டை காப்பாற்றும் போராட்டத்தில் இருந்து என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.  ஏன்  பழி சுமத்தியும், அவதூறுகளை பரப்பியும் என்னை அழிக்க முயற்சி செய்கின்றனர்.  இருப்பினும் எனது லட்சியத்தை அடையும் முயற்சியில் உறுதியாக இருக்கிறேன். ஜோ பைடனின் ஆட்சியில், அணு ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது. சீனா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் வடகொரியா நாடுகள் இணைந்துள்ளன. இது அழிவுக்கான கூட்டணியாகும். ஜோ பைடன் ஆட்சியில் அமெரிக்கா நரகமாகி வருகிறது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இதுவே கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது'-அதிர்ச்சி கொடுத்த ஜோ பைடன்

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 'I hope this is good for the party and the country' - shocked Joe Biden

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது. இந்நிலையில் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 'மிஞ்சியிருக்கும் தனது பதவி காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்றுவேன்; இதுவே எனது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்' என அறிக்கை வாயிலாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Next Story

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு; ஈரான் மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
America's sensational accusation against Iran on Firing at Trump

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். 

இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கி குண்டு டிரம்பின் வலது காதை கிழித்து சென்றது. இதனால், அவர் நூலிழையில் உயிர் தப்பினார். டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்ட தாமஸ் மேத்யூ என்ற இளைஞரை சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டத்திக் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், டிரம்பை கொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.  கடந்த 2020 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்பின் உத்தரவால், அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்குவதாக டிரம்பை கொலை செய்ய ஈரான் சதி செய்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.