Skip to main content

36 ஆயிரம் அடி உயரத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்... 284 பயணிகளுடன் சென்ற போது ஏற்பட்ட விபத்து...

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

நிலப்பரப்பில் இருந்து 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

flight repair in america

ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 284 பேருடன் கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ‘ஏர் கனடா’ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட 2 மணிநேரத்திற்கு பிறகு அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு மேலே, 36 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்துகொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் நடுவானில் விமானம் குலுங்க ஆரம்பித்தது. நடுவானில் பறந்துகொண்டிருந்ததால் பயணிகள் யாரும் சீட் பெல்ட் போடாத நிலையில், விமானத்தில் ஏற்பட்ட குலுக்களால் பயணிகள் மேற்கூரையிலும் இருக்கையிலும் பலமாக மோதிக்கொண்டனர். இதில் 37 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக விமானி, விமானத்தை சரியாக கையாண்டு அவசரமாக அருகிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் விமானியின் இந்த சாதுரியத்தால் 284 பேரின் உயிர்கள் காப்பற்றுள்ளப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.