ff

ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து போலி கணக்குகள் மீதான நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், சில நாட்களுக்குமுன் இந்தோனேஷியாவில் போலியாக செய்திகளை பரப்பிவந்த 207 ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் 800 ஃபேஸ்புக் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியது.

Advertisment

இந்நிலையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் போலி கணக்குகளின் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் இது மூன்று மடங்கு அதிகமெனவும் தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் போலி கணக்குகள் 11% அதிகரித்துள்ளதாகவும், அதேசமயம் இந்த கணக்கு 2015-ம் ஆண்டில் 5% மட்டுமே இருந்ததாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment