Skip to main content

6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் உருவப்படம் வெளியீடு... ஆராய்ச்சியாளர்களின் சாதனை...

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண் ஒருவரின் உருவப்படம் அவர் மென்ற சுவிங்கத்திலிருந்து கிடைத்த டி.என்.ஏ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

face of a woman who lived 6,000 years ago recreated by dna found in chewing gum

 

 

கருமையான முகம், அடர் கருஞ்சிவப்பு நிற கூந்தல் மற்றும் நீல நிற கண்களை கொண்டிருக்கும் அந்த பெண் வேட்டையாடும் பெண்ணாக இருந்திருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டென்மார்க்கின் பால்டிக் கடல் பகுதியில் இந்த பெண் வாழ்ந்திருக்கலாம் எனவும், அவரது உணவு பழக்கங்களில் மிகமுக்கியமானதாக ஹசல் நட்ஸ் மற்றும் மல்லார்ட் வாத்து இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உறைந்த பிசின் போன்று கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த பொருளில் இருந்த பற்களின் தடையங்களை கொண்டே அது சுவிங்கமாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். மேலும் அது பல் வலி அல்லது மற்ற நோய் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மனித உடலின் எந்த பாகமும் இன்றி அவர் மென்ற சுவிங்கத்தை வைத்து அதிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மரபணுவை மட்டுமே கொண்டு கோபன் ஹாகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த உருவத்தை வடிவமைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெள்ளத் தெளிவான தென்துருவ நிலவு; கால் பதிக்க காத்திருக்கும் சந்திரயான் - 3

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

A clear South Pole Moon; Chandrayaan-3 waiting to set foot

 

இந்தியா சார்பில் சந்திரயான்-3 கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 இன் உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பணியை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும் இடத்தில் உந்து சக்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி சந்திரயானை நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தி வந்தனர்.

 

நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் - 3 விண்கலத்தின் பயணத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சந்திராயன் 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சந்திரயான் - 3 விண்கலம் வரும் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைக்க உள்ளது.

 

இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.  விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா நிலவின் மேற்பரப்பை மிக அருகிலிருந்து துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பியதாக இஸ்ரோ சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. லேண்டரின் சுற்றுப்பாதையின் உயரம் மேலும் குறைக்கும் நடவடிக்கை இன்று மாலை 4 மணிக்கு மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது விக்ரம் லேண்டர் அனுப்பிய இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நிலவில் உள்ள மேடு, பள்ளங்கள் மற்றும் மேற்பரப்பின் தன்மை ஆகியவை இந்த புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்னரே நிலவின் புகைப்படங்களை லேண்டர் அனுப்பியிருந்தாலும் இந்த தெளிவான புகைப்படம் இஸ்ரோவிற்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

 

சந்திரயான் - 3 திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது. ஏற்கனவே நிலவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தரையிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

 

 

Next Story

சோழர் வரலாற்றைப் பேசும் வலங்கைமாலை ஓலைச்சுவடி; ஆய்வாளர் தகவல்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

palm leaf script talks about cholas history valangaimalai

 

தமிழர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணங்களாகக் கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் விளங்குகின்றன. இதில் ஓலைச் சுவடிகள் முதன்மையான ஆவணமாகத் திகழ்கின்றன. முற்காலத்தில் ஓலையில் எழுதி சரிபார்க்கப்பட்ட செய்தியே பின்னர் கல்லிலும் செப்பிலும் வெட்டப்பட்டது. இதன் மூலம் ஓலைச்சுவடிகளின் தொன்மை விளங்கும். தமிழகத்தில் பரவலாக ஓலைச்சுவடிகள் கிடைக்கின்றன. ஆனால் அவை திரட்டப்படாமல் அழிந்து வருகின்றன.

 

இந்நிலையில் நிகழ் காலத்தில் ஓலைச்சுவடிகளைக் கள ஆய்வு செய்து கண்டுபிடித்து, பதிப்பித்து நூலாக்கி வரும் சுவடியியல் அறிஞரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் புதிதாகச் சோழர் வரலாற்றுத் தொடர்புடைய ஒரு ஒலைச்சுவடியைக் கண்டுபிடித்துள்ளார். அந்த சுவடி குறித்து அவர் கூறியதாவது, "ஓலைச்சுவடிகள் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றையும், பண்பாட்டு வரலாற்றையும் தாங்கி நிற்கும் முதன்மை ஆவணங்கள் ஆகும். ஓலைச்சுவடிகள் பழந்தமிழர்களின் அறிவு மரபுத் தொகுதிகளாகவும் விளங்குகின்றன. இத்தகைய அறிவு மரபுச் சிறப்புடைய ஓலைச்சுவடிகள் வழியாகத்தான் சங்கத் தமிழரின் பண்பாட்டுமாண்பு உலகிற்குத் தெரிந்தது. பக்தி இலக்கியச் சுவடிகள் வழியாகத்தான் தமிழரின் இறையியல் கோட்பாடு மீட்டெடுக்கப்பட்டன. பழந்தமிழ் ஓலைச்சுவடிகள் வழியாகத்தான் தமிழரின் கணிதவியல், வானியல், சித்த மருத்துவவியல், சோதிடவியல், மந்திரவியல், ஜாலவியல், வரலாற்றியல், இலக்கியவியல் உள்ளிட்ட பல்வேறு அறிவு மரபுகள் நமக்கு கிடைத்துள்ளன.

 

தமிழகத்தில் சுவடி நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்கள், சித்த மருத்துவ மையங்கள், கோயில்கள், மடங்கள், ஜமீன்கள், கவிராயர் வீடுகள், தனிநபர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுவடிகள் உள்ளன. தமிழ்ச் சுவடிகள் இந்தியாவில் பல மாநிலங்களில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கிடைக்கின்றன. உதாரணமாக கேரளப் பல்கலைக்கழகக் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் 5024 தமிழ்ச்சுவடிகள் உள்ளன. பாரிஸ் தேசிய நூலகத்தில் 1500 தமிழ்ச் சுவடிகள் உள்ளன. தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியிலும் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டித் தொகுத்து நூலாக்கப் படாமல் அழிந்து வருகின்றன. அவற்றை மீட்டு நூலாக்கம் செய்ய தமிழ் அறிஞர்கள் முன்வர வேண்டும். இல்லையெனில் அழிந்து பட்ட கணக்கற்ற நூல்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

 

palm leaf script talks about cholas history valangaimalai

தமிழ்ச் சுவடிகளைப் படிக்க, படியெடுக்க, பதிப்பிக்கத் தெரிந்தவர்கள் சுமார் 10 பேர் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர். இளைய தலைமுறையினர் சுவடித்துறையில் ஆர்வம் காட்டாமல் விலகி இருக்கின்றனர். இதனால் விரைவில் தமிழ்ச் சுவடிகளைப் படிக்கத் தெரிந்த நபர்கள் இல்லாது போகும் காலம் விரைவில் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. தமிழ்ச் சுவடிகளைத் தேடித் திரட்டிப் பாதுகாக்கும் எண்ணம் கொண்ட நான் சுமார் 20 ஆண்டுகளாகச் தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்து வருகிறேன். இதுவரை 56 ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்து நூலாக்கியுள்ளேன். 20 சுவடிகளைத் தொகுத்துப் பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

 

நீண்ட காலமாக இராஜராஜ சோழன் வரலாற்றுச் சுவடியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். அதைக் கண்டுபிடித்துப் பதிப்பித்து தமிழ்ச் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பது என் கனவு. அதுபோல இராவண மருத்துவச் சுவடி, அகத்தியர் - 12,000 சுவடி, போகர் - 12,000 சுவடிகளையும் தேடி வருகிறேன். மதுரை பகுதியிலிருந்து தமிழரின் யானை மருத்துவச் சுவடிகள் 7, எனது மாணவி செ.பரமேஸ்வரி அவர்களின் உதவியுடன் கண்டுபிடித்து படியெடுத்து நூலாக்கி வருகிறேன். ஆனையின் பிறப்பு, ஆனை வகை, ஆனையை போர்க்களத்தில் பயன்படுத்தும் முறை, ஆனையின் வெளி மற்றும் உள் மருத்துவ முறைகள் முதலிய பல அரிய செய்திகள் சுவடிகளில் காணப்படுகின்றன. ஆனை மருத்துவச் சுவடிகளை எழுதியது அகத்தியர் என்ற குறிப்பு சுவடிகளில் காணப்படுகின்றன. மேலும் ஆனை மருத்துவச் சுவடியை வடமொழியில் மொழிபெயர்த்து வழங்கியவர் பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் என்ற குறிப்பும் ஒரு சுவடியில் காணப்படுகிறது.

 

palm leaf script talks about cholas history valangaimalai

தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தொகுப்பதையும் நூலாக்கம் செய்வதையும் கடமையாக வைத்துள்ள நான் குமரி மாவட்டப் பகுதியில் கள ஆய்வு செய்தேன். அப்போது கொடுமுட்டி ஊரைச் சேர்ந்த சித்த மருத்துவர் செ.பால் பேக்கர் என்பவரிடம் இருந்து சௌந்தர்ய லகரி உரை, சடாச்சர அந்தாதி, கிருத்தவ இலக்கியம் ஆகியவை அடங்கிய ஒரு ஓலைச்சுவடியைப் பெற்றேன். பின்பு அவரின் உதவியுடன் மாங்கரை சித்த மருத்துவர் மேத்யூ அவர்களிடமிருந்து சோழர்கள் வரலாற்றைப் பேசும் 'வலங்கைமாலை' எனும் சுவடியைப் போட்டோ நகலியாக எடுத்து சேகரித்தேன். இந்நூலை எழுதியவர் மானாடு சுந்தரம் ஆவார். இந்நூல் இயற்றப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூல் கரிகால் சோழன், குலோத்துங்க சோழன் பற்றிய வரலாற்றுச் செய்திகளைப் பேசுகின்றது. மேலும் வலங்கைச் சான்றோர் எனும் உய்யக்கொண்டார் நாடார்களின் வரலாற்றையும் விரிவாக கூறுகிறது. சுவடியில் உள்ள வரலாறுகள் நிகழ்ந்த காலம் கி.பி.11 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

அதன் பின் சென்னையில் எழுத்தாளர் தி. மைதிலி, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த வி.ஆர்.கே. சிதம்பரம் செட்டியார் என்பவரிடமிருந்த காரைக்குடி வணிகர்களின் வணிகம் தொடர்பான 5 ஓலை ஆவணக்கட்டுகள் பெற்றுத் தந்தார். இந்த ஓலைச்சுவடி ஆவணங்கள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஓலை ஆவணங்களில் வட்டிக்கு பணம் வழங்கியமை, நிலங்களை அடமான பத்திரமாக எழுதி வாங்கியது உள்ளிட்ட பல செய்திகள் காணப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வரும் தனிநபர்கள் அரிய சுவடிகளை வைத்திருந்தால் அவற்றைப் பதிப்பித்து நூலாக்கிட தந்து உதவுமாறு வேண்டுகோள்" விடுத்தார்.