Skip to main content

ஆங்கில பெண்ணின் தமிழ் பாடல்... வைரல் ஆகும் 'மலர்ந்தும் மலராத' பாடல்!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019


இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் சமந்தா ரேயான். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தமிழ் முறைப்படி நடந்தது. கண்ணனைத் திருமணம் செய்து கொண்டது முதல் தமிழ் மீது இவருக்கு அதிகமான ஈர்ப்பு ஏற்படத்துவங்கியது. இவர் தொடர்ந்து தமிழ் படிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். குறிப்பாகத் தமிழ் சினிமா பாடல்கள் மீது அதிக ஆர்வம் வந்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் நீதானே என்ற பாடலை இவர் பாடி வெளியிட்ட வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலாகியது. இந்த வீடியோவை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர்.



இந்நிலையில் இவர் தற்போது பழைய தமிழ் திரைப்படமான பாசமலர் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மலர்ந்தும் மலராத என்ற பாடலை பாடி ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவும் தற்போது மிக வைரலாக பரவி வருகிறது. பல்லாரயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்து இவரைப் பாராட்டி வருகின்றனர்

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசை விமர்சித்து பா.ஜ.க.வினர் வெளியிட்ட பிரச்சார பாடலால் பரபரப்பு!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
The propaganda song released by the BJP criticizing the central government caused a stir

கேரளா மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் கே.சுரேந்திரன். இவர் மாநிலம் முழுவதும், ‘கேரள பாதயாத்திரை’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மாநிலம் தழுவிய இந்த நடைபயணத்திற்காக கேரளா பா.ஜ.க சார்பில் ஒரு பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. 

அந்த பாடலில், ஊழல் நிறைந்த மத்திய அரசுக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு அழைக்கு விடுக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பாடலை, கேரள பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் பகிரப்பட்டது. மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இடம்பெறும் இந்த பாடலை கேரள பா.ஜ.க வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, அந்த பாடல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை'- பாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

nn

 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக இரண்டாவது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (21.11.2023) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மு.பெ. சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், பல்கலைக்கழக துணைவேந்தர் சீ. சௌமியா, பல்கலைக்கழக பதிவாளர் சிவசௌந்தரவள்ளி, கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம். கிருஷ்ணா, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கும், கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் மேலைநாட்டு இசைக் கலைஞர் பி.எம். சுந்தரத்திற்கும் டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாடகி பி. சுசீலாவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

 

பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பாடகி பி. சுசீலா, பி.எம். சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது. பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். நான் எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது காரில் அவருடைய பாட்டைக் கேட்டுக்கொண்டே போவேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, அடிக்கடி நான் பல இடங்களில் அதைப் பாடியிருக்கிறேன். ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை; உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை’. அதனால் மேடைக்கு வந்தவுடனே அம்மையாரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டுத்தான், நான் உங்கள் ரசிகன் என்று வெளிப்படையாகவே சொன்னேன்'' என்றார்.