உலகின் பிரபலசமூக ஊடகமானட்விட்டரைநம்பர் ஒன் பணக்காரரானஎலான்மஸ்க்அண்மையில்வாங்கப் போவதாக அறிவித்தார்.பின்னர்,ட்விட்டரில்மொத்தமுள்ள கணக்குகளில் 5 சதவீத கணக்குகள் போலி என்பது தெரிய வந்ததால்அதனை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளதாகதெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் அடுத்தஅமெரிக்கதேர்தலில்ட்ரம்பைவேட்பாளராகநிறுத்தவுள்ள குடியரசு கட்சிக்கு வாக்களிக்கப் போவதாகதெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் நிறுவனங்களால் அமெரிக்காவில் தயாரிக்கும் மின்சார கார்களுக்கு தற்போதைய ஜோபைடன்அரசு வரிச்சலுகை அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளஎலான்மஸ்க், பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் வெறுப்புஅரசியலைக்கையாளும் ஜோபைடனின்மக்களாட்சி கட்சிக்கு இனி வாக்குச்செலுத்தமாட்டேன். என்னால் இனி அவர்களை ஆதரிக்க முடியாது, குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன் எனதெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர்வாங்கப்போவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட டிவிட்டர் மூலமாகவே தெரிவித்துள்ளார்மஸ்க்என்பது குறிப்பிடத்தக்கது.