Skip to main content

வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்!

 

elon musk rocket starship rocket spacex incident

 

உலகின் முன்னணி பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக  400 அடி உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய ராக்கெட் என்ற சிறப்புடன் ஸ்டார்ஷிப் என்று பெயரிட்டு விண்ணில் ஏவுவதற்கான பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. விண்வெளியில் சுற்றுப் பயணம் செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த ராக்கெட் மூலம் நிலவிற்கும், செவ்வாய் கோளிற்கும் மனிதர்களை அனுப்பவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.

 

அமெரிக்காவின் டெக்சாஸ் என்ற இடத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை முயற்சியாக விண்ணில் ஏவப்பட்டது. அப்போது ராக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் ராக்கெட் செயல்படாததால் விண்ணுக்கு ஏவப்பட்ட 4 நிமிடங்களில் திடீரென ராக்கெட்டானது வானில் வெடித்துச் சிதறியது. இதனால் வான் பகுதியில் சிறிது நேரம் புகை மண்டலமாக காணப்பட்டது. மேலும் வெடித்துச் சிதறிய ராக்கெட்டின் உதிரி பாகங்கள் பசிபிக் கடலில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !