elon musk

சமீபத்தில் எலான்மஸ்க்கின்டெஸ்லாநிறுவனம், இந்திய மதிப்பில்10 ஆயிரம் கோடி(1.5 பில்லியன்டாலர்) ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை வாங்கியுள்ளதாக அறிவித்தது. ஏற்கனவே #bitcoin என்ற ஹாஷ்டேக்கைஎலான்மஸ்க்,தனதுட்விட்டர் பக்கத்தில் இணைத்ததிலிருந்தே பிட்காயின்களின் விலை அதிகரித்து வந்தது. அதன்பிறகு டெஸ்லாநிறுவனத்தின் முதலீடு குறித்த அறிவிப்பினைத் தொடர்ந்து, பிட்காயின்களின் விலை 17 சதவீதம் அதிகரித்தது.

Advertisment

இந்நிலையில் பிட்காயின்குறித்தஒரே ஒரு ட்வீட்டால், எலான்மஸ்க்15 பில்லியன் அமெரிக்கடாலர்களை இழந்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்டட்வீட்ஒன்றில், பிட்காயின் விலை அதிகமாகதெரிவதாகக் கூறியிருந்தார். இதனையடுத்து டெஸ்லா நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் அவர், 15 பில்லியன்டாலர்களை இழந்துள்ளார். இது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடியாகும்.

Advertisment

இதன்மூலம் எலான் மஸ்க், உலகின்மிகப்பெரிய பணக்காரர்என்ற இடத்தையும் இழந்துள்ளார். மேலும் பிட்காயின்விலையும்குறையத் தொடங்கியுள்ளது.