Skip to main content

எனக்கு யாரும் தேவையில்லை; நானே ராஜா, நானே மந்திரி; எலானின் அடுத்த அதிரடி 

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

 Elon Musk has fired Twitter board directors

 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை தன் வசப்படுத்திக் கொண்டார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நிலையில், பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு முழுமையாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். 

 

அதன் பிறகு  ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வாலைப் பொறுப்பில் இருந்து நீக்கினார். அத்துடன் அந்நிறுவனத்தின் சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியில் இருந்து நீக்கி பல அதிரடி முடிவுகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.

 

இந்நிலையில், எலான் மஸ்க் மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளாராம். அதன்படி ட்விட்டர் நிறுவனத்தின் 9 பேர் கொண்ட இயக்குநர் குழுவை அதிரடியாக நீக்கியுள்ளதாகவும், இதன் மூலம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவும், தலைமை செயல் அதிகாரியும் தான் மட்டுமே என எலான் மஸ்க் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

இதனிடையே, எலான் மஸ்க் ட்விட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்தும் பயனாளிகளிடம் மாதக் கட்டணமாக ரூ.1500 வசூலிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ட்விட்டரில் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்கள் ப்ளூ டிக்கைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்