68 வயது பாட்டிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் லாகோஸ் நகரில் வசித்து வருபவர் நோவா அடெனுகா. இவருக்கு வயது 77. இவரின் மனைவி பெயர் மார்கரெட் அடெனுவா. இவருக்கு வயது 68. இவர்கள் இருவருக்கும் 1974ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 46 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. குழந்தை இல்லாத காரணத்தால் அவர்கள் இருவரும் கடும் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgj_7.jpg)
இருந்தாலும் குழந்தைகள் மீதிருந்த அவர்களின் அதீதஅன்பு, தங்களுக்கு எப்படியாவது ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் அதிகப்படுத்தியது. பல்வேறு மருத்துவர்களை பார்த்தும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மேலும் குழந்தை பெறுவதற்காக மூன்று முறை ஐவிஎஃப் முறையை பயன்படுத்தினாலும் அது அனைத்துமே தோல்வியில் முடிவடைந்தது.இருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்த அவர்களுக்கு தற்போது அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. கடந்த வாரம் லாகோஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர்களுக்கு குழந்தை பிறந்தது. இந்த செய்தி அந்நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)