eight people passed away in mahara prison

கரோனா அச்சம் காரணமாக சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் எட்டு கைதிகள் பலியான சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள மகரா மத்திய சிறைச்சாலை அந்நாட்டின் மிகமுக்கிய சிறைச்சாலை ஆகும். உலகின் மிக நெருக்கமான சிறைகளை உடைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இலங்கையில் 10,000 பேரை அடைப்பதற்கு மட்டுமே வசதி உடைய சிறைகளில் சுமார் 26,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார். இப்படி நெருக்கடி மிகுந்த இலங்கை சிறைச்சாலைகளில் கரோனா பரவலுக்குப் பின் கைதிகள் தாள்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். அந்தவகையில் மகரா சிறையிலிருந்த கைதிகள் தங்களைப் பாதுகாப்பான சிறைக்கு மாற்றவேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், இந்த கோரிக்கைகள் குறித்து சிறைத்துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சிறையில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது தொடர்பாக கைதிகள் நேற்று முன்தினம் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

சமையல் அறைகளுக்கும், ஆவண அறைக்கும் தீ வைத்த கைதிகள், 2 வார்டன்களை பிணைக் கைதிகளாகப் பிடிக்க முயன்றுள்ளனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் எட்டு கைதிகள் உயிரிழந்தனர். மேலும் போலீஸார் உட்பட 55 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகள் ஒருசிலரின் நிலை குறித்துத் தெரியாத அவர்களது குடும்பத்தினர், சிறை வாசலிலேயே சாலையில் அமர்ந்து அவர்கள் குறித்த தகவலுக்காகக் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.