மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக சீனாவில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்த சூழலில், அந்த வைரஸ் பாதிப்பு தென் கொரியா மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

corona virus detected in washington mans blood

Advertisment

Advertisment

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் சார்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. வைரஸ் நோயான இதற்கு 650 பேர் வரை பலியாகினர். இந்நிலையில் இதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் அச்சம் எழுந்துள்ளது.

இந்த வைரஸ் காரணமாக இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சீனாவில் பணியாற்றும் இந்திய பெண் ஒருவருக்கு இந்த நோய் தோற்று கண்டறியப்பட்ட நிலையில், தென் கொரியாவில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாஷிங்டன் நகரில் வசிக்கும் 30 வயதுடைய அந்த நபர் சமீபத்தில் பணி நிமித்தமாக சீனா சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட அந்த நபரை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.