kl;

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்தாக்கியுள்ளது. 26 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகளவில் 12.18 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9.81 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26.91 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. பின்னர், பாதிப்பு எண்ணிக்கை சீராக குறையத் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.