சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சீனாவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். செவிலியர்களும் 24 மணி நேரமும் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் நர்ஸ் ஒருவரை காண வந்த அவருடைய காதலருக்கு, அவரிடம் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று அபாயம் உள்ளதால் அவர்கள் இருவரும் கண்ணாடி தடுப்புக்களுக்குள் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.