corona death

ஈரானில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. தற்போது மொத்த பலி எண்ணிக்கை 19,000-ஐகடந்தது.

Advertisment

சீனாவின் உகான் நகரத்தில் இருந்து கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கரோனா பரவலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இதனைத் தவிர்த்து பல நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் தற்போது அதிகமாகதொடங்கியுள்ளது.

Advertisment

அந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 3,36,324 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மொத்த பலி எண்ணிக்கை 19,162 எனப்பதிவாகியுள்ளது. ஈரானில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.