Skip to main content

மீண்டும் அதிகரிக்கும் கரோனா; அச்சத்தில் சீன மக்கள்  

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

corona again curfew china

 

உலகையே அச்சுறுத்தி லட்சக்கணக்கான உயிர்ப் பலிகளை வாங்கிய கரோனா வைரஸை எளிதில் யாராலும் மறக்க முடியாது. உலகில் முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த கரோனா வைரஸ், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவி ஏராளமான மரணங்கள், ஊரடங்கு, பொருளாதார முடக்கம் எனப் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியது. அதன் பிறகு முகக்கவசம், தடுப்பூசி எனப் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றி படிப்படியாகக் கரோனா தொற்று குறைந்து உலக நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கிறது. 

 

இந்நிலையில், சீனாவில் கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதனால், சீனாவில் உள்ள பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறைந்து வந்த கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிப்பதால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.