Congress leader Mani shankar aiyar says Sheikh Hasina has done a lot of good for India

வங்கதேசத்தில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க வங்கதேச அரசு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் பிவாரண்ட் பிறப்பித்து கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே சமயம் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் அவரது அதரவாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பக்கூடாது எனத் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

Advertisment

இதனையடுத்து, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நீதிமன்றம் மீண்டும் கைது உத்தரவிடப்பட்டது. இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடந்த போது ஏராளாமானோர் மர்மமான முறையில் காணாமல் போனதாக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஷேக் ஹசீனா வரும் பிப்ரவரி `12ஆம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என வங்கதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால், அவரை உடனடியாக ஒப்படைக்க வேண்டுமென அந்நாடு இந்தியாவுக்கு கோரிக்கை வைத்துள்ளது

 Congress leader Mani shankar aiyar says Sheikh Hasina has done a lot of good for India

இந்த நிலையில், ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்க வைக்க வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு நிறைய நல்லது செய்துள்ளார் என்பதில் நாம் ஒருபோதும் கருத்து வேறுபாடு கொள்ள மாட்டோம் என்று நம்புகிறேன். அவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் விரும்பும் வரை, அது அவரது வாழ்நாள் முழுவதும் கூட, நாம் அவரை விருந்தோம்பியாக இருக்க வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்துக்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய அவர்களின் அறிக்கைகள் உண்மைதான், ஆனால் மிகைப்படுத்தப்பட்டவை” என்று கூறினார்.

Advertisment