சீனாவை சேர்ந்த சியோ வாங் என்னும் 17 வயது டீனேஜ் இளைஞர் ஐபோன் 4 வாங்க ஆசைப்பட்டு 7 வருடங்களுக்கு முன் தனது கிட்னியை விற்றுள்ளார். ஒரு கிட்னியுடன் 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அவரின் மற்றுமொரு கிட்னியும் பாதிக்கபட்டதால் தற்பொழுது மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாங் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஐபோன் 4 வெளியானது. அதனை வாங்குமளவுக்கு அவருக்கு வசதி இல்லாததால், தனது கிட்னியை விற்று போனை வாங்கியுள்ளார். அப்பொழுது சுகாதாரமில்லாத முறையில் அறுவை சிகிச்சை நடந்ததால் ஏற்பட்ட தொற்று தற்பொழுது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவு வளர்ந்திருக்கிறது. இதனால் அவர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புது ஐபோன் வாங்க கிட்னியை விற்றவருக்கு நேர்ந்த சோகம்...
Advertisment