Skip to main content

"நெருப்புடன் விளையாடுபவர்கள் எரிந்து போவார்கள்" - பைடனுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த ஷி ஜின்பிங்!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

joe biden - xi jinping

 

அமெரிக்கா- சீனா இடையிலான உறவு தொடர்ந்து மோசமாகி கொண்டே இருந்த நிலையில், அமெரிக்க-சீன நாடுகள் காணொளி வாயிலாக ஒரு உச்சி மாநாட்டை நடத்தியுள்ளனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நீண்ட நேரம் உரையாடியுள்ளனர்.

 

எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக நேரம் நீடித்த இந்த உரையாடலில் சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் விவகாரங்கள், வர்த்தக பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடலின் போது "அமெரிக்காவில் உள்ள சிலர் சீனாவைக் கட்டுப்படுத்த தைவானைப் பயன்படுத்துகின்றனர். இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. இது நெருப்புடன் விளையாடுவது போன்றது. நெருப்புடன் விளையாடுபவர்கள் எரிக்கப்படுவார்கள்" என சீன அதிபர் கூறியதாக அந்தநாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.

 

இதற்கிடையே இந்த உரையாடல் தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங்கில் சீனாவின் செயல்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து அதிபர் ஜோ பைடன் கவலைகளை எழுப்பினார். சீனாவின் நியாயமற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார நடைமுறைகளில் இருந்து அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் தெளிவாக இருந்தார். அவர் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்தார்" என கூறப்பட்டிருந்தது.

 

மேலும் தைவானில் நிலவும் நிலையை ஒரு தலைப்பட்சமாக மாற்றும் முயற்சிகளையும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

 

இந்த உரையாடலின் தொடக்கத்தில் பேசிய ஜோ பைடன், "எங்கள் நாடுகளுக்கு இடையேயான போட்டியானது, திட்டமிடப்பட்டோ அல்லது திட்டமிடப்படாமலோ மோதலாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்வது சீனா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களாகிய நமது பொறுப்பு என்று எனக்குத் தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்.

 

அப்போது பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், "நாம் ஒன்றாக பல சவால்களை சந்திக்கிறோம். உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற வகையில், சீனாவும் அமெரிக்காவும் தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்" எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
US President Joe Biden's son case related verdict

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் 46 வது அதிபராக 2021 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவரது மூத்த மகன் ஹண்டர் பைடன் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஜோ பைடன் கருத்து தெரிவிக்கையில், “எனது மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தைவான் அதிபரின் வாழ்த்துக்குப் பதிலளித்த மோடி; எதிர்க்கும் சீனா!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
Opposing China for Modi responded to Taiwan President's greeting

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். 

மூன்றாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு 75க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தைவான் அதிபர் லாய் சிங்-டே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தேர்தல் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வேகமாக வளர்ந்து வரும் தைவான்- இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்தவும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் செழிப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் எங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என்று பதிவிட்டிருந்தார். 

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, ‘உங்கள் அன்பான வாழ்த்து செய்திக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்றும்போது, நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கிறேன்.’ என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் பதிலுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மாவோ நிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “தைவான் பிராந்திய அதிகாரிகள் மற்றும் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை சீனா எப்போதும் உறுதியாக எதிர்க்கிறது. உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. ‘ஒரே சீனா கொள்கை’ தொடர்பாக, இந்தியா தீவிர அரசியல் அர்ப்பணிப்புகளை செய்துள்ளது. தைவான் அதிகாரிகளின் அரசியல் திட்டங்களுக்கு எதிராக இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சீனா கொள்கையை மீறும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.