Skip to main content

"அவ உன் பொண்டாட்டி இல்ல.... என் மகள்...!" - மகனுக்கு அதிர்ச்சி கொடுத்த தாய்.!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

china marriage incident

 

தனது சகோதரனையே மணப்பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. சீனாவில் ஜியாங்க்சு பகுதியில் வசிக்கும் மணமகனுக்கும், மணமகளுக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். சில நிமிடங்களில் திருமணம் நடைபெற உள்ளது என்ற சந்தோஷத்தில் மணமகனும், மணமகளும் இருக்க பூகம்பம் வெடித்தது.

 

திருமணத்திற்குத் தயாரான மணமகளைப் பார்த்த, மணமகனின் தாய்க்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பிறப்பில் இருந்தே இருக்கும் தழும்பு ஒன்று, மணமகளின் உடலில் இருக்க அதனைப் பார்த்த மணமகனின் தாய், அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி மணமகளின் குடும்பத்தாரிடம் அவரின் உண்மையான தாய், தந்தை குறித்து விசாரித்தார். அப்போதுதான் அந்தத் தகவல் அனைவரையும் திடுக்கிடச் செய்ததது. மணமகளை 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் தத்தெடுத்து தங்களது மகளாக வளர்த்துவந்ததாக அவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.

 

அதே 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது பெண் குழந்தையை மணமகனின் பெற்றோர் தொலைத்துள்ளனர். அந்தப் பெண் தான் இந்த மணமகள் என்பதை அவளது உடலில் இருந்த தழும்பைக் கொண்டு மணமகனின் தாய் கண்டறிந்தார். இந்த தகவலை அறிந்ததும் தன்னை பெற்றெடுத்த நிஜத் தாயைக் கட்டியணைத்துக் கொண்டு மணமகள் அழுதார். இதன் மூலம் மணமகனுக்கு, மணமகள் சகோதரி உறவு முறையாவதால் அனைவரும் செய்வதறியாது திகைத்தனர்.

 

அப்பொழுது வேறொரு அதிர்ச்சி தகவலையும் மணமகனின் பெற்றோர் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். அதாவது தங்களது பெண் குழந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து விட்டதால் வேறொரு ஆண் குழந்தையை எடுத்து தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும், அவன் தான் இந்த மணமகன் என்றும் கூறினர். இதனைக் கேட்டதும் உறவுமுறையில் தாங்கள் சகோதரன், சகோதரி இல்லை என்ற ஆனந்தத்தில் மணமகனும், மணமகளும் திளைத்திருக்க இருவருக்கும் நிச்சியம் செய்தபடி திருமணம் நடைபெற்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார்.