அலுவலகத்தில் சிஇஓ ஒருவர் ஊழியருடன் சேர்ந்து நடனமாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலானவர்கள் தற்போது மனஅழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளால் பாதிக்கப்படுவதாக பல்வேறு சர்வே முடிவுகள் வெளியாகி வருகின்றன. வேலை பளுவே அதற்கு காரணமாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் வெல்ஸ் பன் நிறுவனத்தின் சிஇஓ தீபாலி கொயனாக் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுடன் அலுவலக நேரத்தில் நடனமாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisment

தீபாலி அந்த கம்பெனியின் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து அவர் அலுவலகம் வரும் போதெல்லாம் இந்த மாதிரியான மனதுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நடனமாடுவார் என்று அவரது அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஆண்டிற்கான சிறந்த நிர்வாகி என்ற விருதினை பெற்றிருக்கும் அவருக்கு இணையத்திலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. அவரின் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.