சாலையின் தடுப்புசுவரில்பேருந்து மோதிய விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட 17 பேர் காயமடைந்துள்ளனர்.
பெரு நாட்டின் தலைநகர்லிமாவில்சாலையில்சென்றுகொண்டிருந்த பேருந்து நடுவே உள்ளதடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதியது. மேலும்,அவ்வழியாகசென்ற வாகனங்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பானசிசிடிவிகாட்சி சமூக வலைத்தளங்களில்வைரலாகிவருகிறது. அதில், சாலையின் நடுவேநீளவாக்கில்இருந்தசுவரைப்பேரு ந்து ஓட்டுநர் கவனிக்கத் தவறியதே விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.