British Minister Suella Braverman sacked

பிரிட்டன் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

பிரிட்டன் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேனை அதிரடியாக பதவிநீக்கம் செய்து அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். பாலஸ்தீனஆதரவு போராட்டக்காரர்களை போலீசார் கண்டுகொள்வதில்லை என சுயெல்லா பிராவர்மேன் கூறியது சர்ச்சையான நிலையில் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் கடந்த 2022 ஆண்டு அக்டோபர் முதல் பிரிட்டன் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பிரிட்டன் புதிய உள்துறை அமைச்சராக ஜேம்ஸ் கிளவெர்லியை நியமித்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார்.