இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு, இந்தியா வருமாறு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனை போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

borris johnson accepts modis invite for india visit

4 கோடியே 60 லட்சம் வாக்காளர்களை கொண்ட இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் கடந்த வாரம் நடந்த தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டும் பிரதமராக தேர்வானார். இந்நிலையில், போரிஸ் ஜான்சனுக்கு புதன்கிழமை தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்த இந்திய பிரதமர் மோடி, அவரை இந்தியா வருமாறு அழைப்பும் விடுத்தார். இந்நிலையில் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன், அவரது அழைப்பை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.