BHUTAN PM

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று காலை ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவு காரணமாக தெலலிங்கா ஆற்றில் திடீரென கடுமையான நீர்வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுவரை அங்கு 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வுக்குழு கண்காணிப்புப் பணிகளுக்காக உத்தராகண்ட் விரைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் இரண்டாவது நாளாக நடந்து வருகிறது.

Advertisment

இந்தநிலையில் உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "உத்தராகண்ட் வெள்ளத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். பேரழிவை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தைரியம் அளிக்க வேண்டுகிறேன்.வெள்ளத்தில் காணாமல் போனவர்கள், நல்ல ஆரோக்கியத்துடன் கண்டுபிடிக்கப்படட்டும். இந்தியாவில் உள்ள அன்பு நண்பர்களே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.