/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sfdfdf_2.jpg)
உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்களில் ஒருவரான பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1783 ஆம் ஆண்டு முதல் பஹ்ரைனை ஆண்டுவரும் அழ கலீஃபா குடும்பத்தில் கடந்த 1935 ஆம் ஆண்டு பிறந்த கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா, 1970 முதல் பஹ்ரைன் பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகிலேயே நீண்ட காலம் ஒரு நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து பதவிவகித்தவர் இவரே ஆவார். 84 வயதான கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா உடல்நிலை சரியில்லாததால் அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சூழலில், இன்று காலமானார். அமெரிக்காவிலிருந்து அவரதுஉடல் பஹ்ரைன் கொண்டுவரப்பட்ட பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா மன்னர் ஷேக் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)