ஆற்றில் நீச்சல் அடித்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் தத்தளிப்பதாக நினைத்த குட்டியானை ஒன்று அவரை காப்பாற்ற போராடிய நிகழ்வு டுவிட்டரில் வைரலாகி வருகிறது. வனப்பகுதி ஒன்றில் யானை கூட்டம் ஒன்று ஆற்றில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு கடந்து சென்றுள்ளது. அப்போது சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் அளிக்கும் பொருட்டு ஆற்றின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நீந்தி சென்றுள்ளார்.

Advertisment

ஆனால், இந்த காட்சியை கண்ட கூட்டத்தில் இருந்ந யானை குட்டி ஒன்று, அவரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் இறங்கி அவரிடம் ஓடியது. இந்த காட்சியை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.