கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

80 american army personnels passed away in iraq claims iran medias

Advertisment

Advertisment

இந்தநிலையில், ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவும் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் தாக்குதலில் உயிரிழப்புகள் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.