உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54,01,222 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,43,799 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 22,47,109 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் அதிகபட்சமாக அமெரிக்காவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 16,66,826 ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 98,683 ஆக அதிகரித்துள்ளது.