/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-9_25.jpg)
திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் பகுதியில் ஷியாபி (32) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் உணவகத்திற்கு இரண்டு பெண்கள் மற்றும் சிறார்கள் இருவருடன் நான்கு இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது தாங்கள் விரும்பி கேட்ட குளிர் பானம், கொண்டு வர தாமதமானதால் ஆத்திரத்தில் உணவக ஊழியர்களை கண்மூடித்தனமாக இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
மேலும், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். கோபம் அடங்காமல் உணவகத்தை விட்டு வெளியே வந்த பின்னரும் செங்கற்களை வீசி எறிந்து வெளியில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர ஊர்தி, அலங்கார கண்ணாடிகள் ஆகியவற்றையும் உடைத்தனர். இதுகுறித்து உணவக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரியபாளையம் காவல்துறையினர் உணவகத்தை சூறையாடிய அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் (19) என்ற நபரை கைது செய்து தலைமறைவான மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதனிடையே சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)