Skip to main content

தேர்தல் நேரத்தில் சி.விஜயபாஸ்கருக்கு நெருக்கடி கொடுத்த பேனர்..!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

Youth who have been registering for government jobs for years .. problem by the banner put up by friends ..!

 

ஒவ்வொரு நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களிலும் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அந்த வாக்குறுதிகள் நிறைவேறுவதற்குள் அடுத்த தேர்தலை மக்கள் சந்தித்துவிடுகின்றனர். கட்சிகளும் தங்களது புதிய வாக்குறுதிகளை அளிக்கும். அதன்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 கோடி இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்தார். அது தோல்வியடைந்ததை சமீபகாலமாக ராகுல் காந்தியும் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டி வருகிறார்.

 

இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலும் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கிறது. எங்காவது ஒரு வேலை இருந்தாலும் அந்த இடத்திற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அதனால்தான் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர், அலுவக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்குக் கூட ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். 

 

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதினால், தமிழே தெரியாத வெளிமாநிலத்தவர்கள் வேலையைப் பறித்துக்கொண்டு போவதற்கு ஏற்றவாறு தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்து தமிழக இளைஞர்களை வஞ்சிக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் பல இளைஞர்களைத் தவறான வழிக்கும் இழுத்துச் செல்கிறது. ஆனால் தினம்தினம் செய்தித்தாள்கள் முதல் தொலைக்காட்சி வரை 'வெற்றி நடைபோடும் தமிழகமே' வாசகங்கள் விளம்பரங்களாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு நேற்று (14.02.2021) மாலை ஒரு இளைஞருக்காக வைத்தப் பதாகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதாகையில் "புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24ஆம் ஆண்டு பதிவு மூப்பை புதுப்பித்த எங்கள் இனிய நண்பர் கே.ஆனந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்." என்று  பதாகையில் பதிவு எண் மற்றும் செல் நம்பர் வரை பதிவிட்டு, இறுதியில் வேலை இல்லா இளைஞர்கள் வைத்ததாக உள்ளது.

 

இதுகுறித்து வெற்றிகரமாக 24ம் ஆண்டு பதிவு மூப்பை புதுப்பித்த புதுக்கோட்டை அசோக்நகர் கே.ஆனந்தராஜ் நம்மிடம் கூறியதாவது: “நான் முதன்முதலில் 1997 ம் ஆண்டு,  10 வகுப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். தொடர்ந்து +2 முடித்து பதிவு செய்தேன், 2010 ல் ஆசிரியர் பயிற்சி முடித்து பதிவு செய்தேன், 2013 ல் ஓட்டுநர் உரிமம் மற்றும் 2018 ல் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பதிவு செய்திருக்கிறேன். தொடர்ந்து பதிவை புதுப்பித்துக்கொண்டிருக்கிறேன். கடந்த மாதம் புதுப்பிச்சாச்சு. இப்படி 24 வருடமாக வேலைவாய்ப்பிற்கான பதிவைப் புதுப்பித்து வைத்திருக்கிறேன். ஆனால் ஒரு வேலைக்குக் கூட அழைப்பு வரவில்லை. இப்போது ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த ஓட்டுநராக வேலை செய்து வருகிறேன். இதைப் பார்த்த என்னைப் போன்ற வேலையில்லா இளைஞர்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு எனக்காக வாழ்த்துப் பதாகை வைத்துள்ளனர். நேற்று மாலை பதாகை வைத்தார்கள், இன்று காலை அந்தப் பதாகையைக் காணவில்லை,” என்றார். 

 

 

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக அமைச்சர்கள் பெரும்பாலானோர் கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதியில் போட்டியிட திட்டம் வைத்திருப்பதாக சொல்ல படுகிறது. இந்தநிலையில், சுகாதரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரின் மாவட்டமான புதுக்கோட்டையில் இந்தப் பேனரால் பரபரப்பு நிலவி வருகிறது. அதேபோல் மாலை வைத்த பேனர், காலை காணவில்லை என்றால் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள்தான் அகற்றிருப்பார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை’ - தமிழக அரசு தகவல்

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
Tamil Nadu Government information 60,567 government jobs in 3 years

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னையில் 16.02.2024 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில் இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விபரத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்கள். இது குறித்து சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பின்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்காக, ஜனவரி 2024 வரை 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

துறைவாரியான நியமனங்களைப் பொறுத்தவரை நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக் கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும், வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்களும், ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும், காவல்துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் மற்றும் சத்துணவு போன்ற அரசின் பிற துறைகளின் வாயிலாக 15,442 பணியிடங்களும் அந்தந்தத் துறைகளின் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன. இவ்வகையில் 32,709 இளைஞர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம், இந்த அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் (27,858 + 32,709) 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக நம் மாநிலத்தின் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

“30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது” - தமிழக அரசு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Tamil Nadu Chief Minister M.K.Stalin says There is a situation where 30 lakh people will get employment

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘முத்தமிழறிஞர் கலைஞர், சென்னையில் வள்ளுவர் கோட்டம், தருமபுரியில் அதியமான் கோட்டம் எனத் தமிழ் வளர்க்கும் கோட்டங்களை அமைத்தார். அதுபோல், தமிழ்நாடு முதலமைச்சர் 2021இல் பொறுப்பேற்றது முதல் இந்தியாவின் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புதிய முதலீடுகளை ஈர்த்துத் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளைப் புதிது புதிதாக அமைத்துத் தமிழ்நாட்டை ஒரு தொழில் கோட்டமாக உருவாக்கிடும் முயற்சியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்.

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் இலட்சிய இலக்கை நிர்ணயித்து முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முனைப்புடன் செயல்படுகிறது. அதன் முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 2,80,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன. மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின் மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலை வாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu Chief Minister M.K.Stalin says There is a situation where 30 lakh people will get employment

நான்காம் கட்டமாக 27-1-2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன் வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். அவற்றின் பயனாக ரூ.3.440 கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கிய பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டு பாராட்டியது. ஆண்டுவாரி முதலீட்டாளர்கள் சந்திப்பு 2022 நடைபெற்றபோது ஆசிய- ஒசியான மண்டலத்திற்கான சிறந்த முதலீட்டு நிறுவனத்திற்குரிய விருது தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. புதிய தொழில் முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்கள் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டைப் பெரிய அளவில் தொழில் மயமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் 45,000 ஏக்கர் பரப்பளவில் நில வங்கி உருவாக்கப்படுகிறது. இதற்காக, சிப்காட் நிறுவனம் ஏறத்தாழ 33,489 ஏக்கர் நிலம் தெரிவு செய்துள்ளது. இதில், 22,941 ஏக்கர் நிலம் அரசின் நிருவாக அனுமதி பெற்று கையகப்படுத்தப்பட்டு வருகிறது. 

Tamil Nadu Chief Minister M.K.Stalin says There is a situation where 30 lakh people will get employment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன். ஒப்பந்தங்கள் தொழில் நிறுவனங்களாக உருப்பெறத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக முதலமைச்சர், தொழில்துறை அமைச்சரின் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழுவின் தொடர் நடவடிக்கைகளின் மூலம் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடைய 33 மாத ஆட்சிக் காலத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூபாய் 8.65 இலட்சம் கோடி முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அதன் மூலம் ஏறத்தாழ 30 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது முதலமைச்சருடைய ஆட்சிக்காலம் ஒரு மாபெரும் தொழிற் புரட்சிக்கான அடித்தளம் என்பதை வெளிப்படுத்துகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.