Published on 06/12/2024 | Edited on 06/12/2024
சென்னை போரூர் அருகே சாலையில் செல்லும் வாகனத்தின் குறுக்கே பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் பதற வைக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போரூர் குன்றத்தூர் சாலை கெருகம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே காலையில் இளைஞர் ஒருவர் நடந்து வந்துள்ளார். அப்போது சாலையில் நடந்து வந்த இளைஞர் எதிர்பாராத விதமாக திடீரென வாகனத்தின் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் அடையாளம் கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கெருகம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.