Skip to main content

இளைஞர் மரணம்.... காவல்துறையினர் தீவிர விசாரணை!

Published on 15/08/2022 | Edited on 15/08/2022

 

youth incident cuddalore district police investigation

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ளது செவ்வேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது விவசாயக் கூலி தொழிலாளி ராஜேஷ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 32 வயது பிரேமலதா என்பவருக்கும், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொளார் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது விஜயலட்சுமி சபிதா, என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ராஜேஷ். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ராஜேஷ், வேப்பூர் பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்ற இடத்தில் அங்கு வேறு ஒருபெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் இரண்டாவது மனைவி விஜயலட்சுமி சபிதா, ராஜேஷ், ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு விஜயலட்சுமி சபிதா தாய் வீடான தொளாருக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சல் காரணமாக, ராஜேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

இதையடுத்து தற்கொலை செய்துக் கொண்ட ராஜேஷு உடலை அவரது உறவினர்கள், நேற்று மயானத்துக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்து  உடலை எறிவூட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விஜயலட்சுமி சபிதாவின் தந்தை சுப்பிரமணியன் திட்டக்குடி காவல் நிலையத்தில் ராஜேஷ் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், செவ்வேரி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மயானத்தில் ராஜேஷ் உடலை எரியூட்டுவதற்கு தீ வைக்க உறவினர்கள் முற்பட்டனர். இதைக் கண்ட காவல்துறையினர் ராஜேஷ் உடலை ஏறியூட்டாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும், ராஜேஷ் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திட்டக்குடி காவல்துறை டி.எஸ்.பி. காவியா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

 

அதன் பிறகு, ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திட்டக்குடி காவல்துறையினர், ராஜேஷ் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள்; விடுதிக்குள் புகுந்து தாக்கிய கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The gang that broke into the hostel for islamic students engaged in prayer

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், குஜராத் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாதம் ரம்ஜான் மாதம் என்பதால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்களும் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சுற்றி எந்த மசூதியும் இல்லாத காரணத்தினால், விடுதியில் தங்கி இருக்கும் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், விடுதியில் ஓர் இடத்தில் கூடி தொழுகை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், கடந்த 16ஆம் தேதி இரவு இஸ்லாம் வகுப்பைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் விடுதியில் தொழுகை நடத்தினர். அப்போது, அங்கு வந்த சுமார் 25 பேர் அடங்கிய கும்பல், தொழுகை நடத்தி கொண்டிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. 

மேலும், வெளிநாட்டு மாணவர்களை நோக்கி, 25 பேர் கொண்ட கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு தாக்குதலில், வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், பல்கலைக்கழக விடுதிக்குள் வருவதற்குள், அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டது. 

இதனையடுத்து, காயமடைந்த வெளிநாட்டு மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 25 பேர் கொண்ட கும்பல், விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் பறிபோன இளைஞரின் உயிர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
  life of the youth lost due to the negligence of the highway department!

கள்ளக்குறிச்சியில் இருந்து ஏமப்பேர், காரனூர் செல்லும் சாலையில் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் சாலை சீரமைப்பு பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினரால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை விளம்பரங்கள் வைப்பது வழக்கம்.ஆனால்  தற்போது அதையெல்லாம் பல இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என நெடுஞ்சாலைத்துறை மீது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் சாலை சீரமைப்பு பணி நடந்து வரும் ஜெ.ஜெ நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை பலகை வைக்காததால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குதிரைச்சந்தலை பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் ராசு(30) நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் பாலம் வேலை நடைபெறுவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் சாலையில் அடுக்கப்பட்டிருந்த பாறையில் அவரது இரு சக்கர வாகனம் மோதி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ராசு பரிதாபமாக உயிரிழந்தார். நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தான் ராசு உயிரிழந்துள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.