Skip to main content

கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய வாலிபர் கைது!

Published on 29/09/2020 | Edited on 30/09/2020

 

kk

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகிலுள்ளது புக்குளம் கிராமம். இந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக முனியப்பன் என்பவர் பணி செய்து வருகிறார்.

 

சம்பவத்தன்று தியாகதுருகம் டவுனில் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது தியாகதுருகம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற வாலிபர், கிராம நிர்வாக அலுவலரிடம் வந்து வேறு ஒரு நபருக்குச் சொந்தமான நிலத்தின் சிட்டாவை கொடுத்து புக்குளம் ஊரில் உள்ள ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் தாங்கள் கூறும் புக்குளம் ஏரியில் தற்போது தண்ணீர் உள்ளது. மேலும், விவசாயப் பயன்பாட்டிற்கு இல்லாமல் வணிகரீதியாக வியாபாரம் செய்யும் நோக்கில் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

 

"இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வினோத், தன்மீது பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக" கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது, புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து முனியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வினோத்தை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த தகவல் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

லஞ்ச வழக்கில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் கைது

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Village administration officer arrested in bribery case

திருச்சி அருகேயுள்ள முசிறியில் லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தை நாடினார். பட்டா பெயர் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியர் தங்கவேல், ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், 27.12.2023 அன்று அவரிடம் லஞ்சப் பணம் கொடுத்தபோது, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை வட்டாட்சியர் தங்கவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் விஜயசேகருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவானதைத் தொடர்ந்து தேடி வந்த நிலையில், விஜயசேகரை வியாழக்கிழமை(21.3.2024) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.