young woman misbehaves with a college student

சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 20 வயதான மாணவி ஒருவர் பொறியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் திருமங்கலத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் இருந்த 26 வயதான இளம்பெண்ணுடன் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் இரவு நேரத்தில் மது அருந்தியுள்ளனர்.

Advertisment

அப்போது, மாணவிக்கு இளம்பெண் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும், தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்து, பின்னர் அவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரடமைந்த அந்தப்பெண் மாணவி குளிக்கும் போது அவரை ஆபாசமாகப் படம் பிடித்து ஓரினச்சேர்க்கைக்கு மீண்டும் அழைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இளம்பெண் எல்லையை மீறிப்போக, அதிர்ச்சியில் மாணவி வீட்டை காலி செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் மாணவியிடம் வீட்டை காலி செய்தால் உனது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் என்னுடன் பேசுவதைத் தவிர்த்தால் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவி கூறியதில் உண்மை இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் இளம்பெண் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்தப் பெண் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஏன் நான் அப்படிச் செய்தேன் என்று புரியவில்லை என்று கூறி என்னை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். இதனையேற்றுகொண்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் அயனாவரம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.