Skip to main content

''வெளிநாடு செல்ல முயற்சிக்கும் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்'' - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

 'Young people trying to go abroad should be alert'- Minister Senji Mastan interviewed

 

வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிக்கும் இளைஞர்கள் நன்கு அறிந்து, கவனத்துடன் பதிவு செய்து வெளிநாடு செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்,  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குவைத் நாட்டுக்கு சென்னையில் உள்ள அமோசா டிராவல்ஸ் சார்பாக வேலை கிடைப்பதாக சொல்லி ஒருவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து இந்தியா நாட்டின் மதிப்பீட்டில் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவார்கள் என்று சொல்லி இரண்டு ஆண்டு ஒப்பந்தம், தங்குமிடம் நிறுவனமே தரும் என சொல்லி அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் அங்கு இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் கிடைத்துள்ளது. சாப்பாடு உங்கள் சொந்த செலவில் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

இதில் 19 பேர் கடனை அடைக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டு வீட்டுக்கு 8 ஆயிரம், 9 ஆயிரம் என வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த சோகக் கதையை என்னிடம் சொன்னார்கள். இதையெல்லாம் கடந்து மீண்டும் ஒன்றரை லட்சம் கட்டி ரினிவெல் செய்ய வேண்டும் என சொன்னது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகே அங்குள்ள தூதரகத்திற்கும் காவல்துறைக்கும் அவர்கள் சென்றுள்ளனர். அதையும் கடந்து உங்கள் நாட்டுக்கு போக வேண்டும் என்று சொன்னால் பாஸ்போர்ட் தேவை என்று சொன்னால் 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என சொல்லியுள்ளார்கள். இந்த தகவல் எங்களுக்கு கொடுக்கப்பட்டு அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இது வேதனைக்குரியது. வேலை வாய்ப்பை நாடிச் செல்லும் இளைஞர்கள் தான் என்ன நாட்டுக்கு என்ன பணிக்கு சொல்கிறோம், எத்தனை ஆண்டுகள் ஒப்பந்தம் என தெரிந்து சொல்லுங்கள் என்று வலியுறுத்தி வருகிறோம். இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய கூட வசதிகள் உள்ளது. இந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை இனி எந்த காலத்திலும் யாருக்கும் ஏற்படக்கூடாது. இதில் தவறு செய்தவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்