Skip to main content

பகலில் ஆண்... இரவில் சுடுகாட்டில் நகை அணிந்து பெண் வேடம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

பெண் வேடத்தில் ஆண் ஒருவரின் சடலம் சுடுகாட்டில் மீட்கப்பட்ட சம்பவமானது கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கேரள மாநில கண்ணூர் பகுதியில் மூன்று மாதம் முன்னர் வனப்பகுதியில் இருந்து பெண் வேடத்தில் ஆணின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், கேரளா மாநிலத்தில் கண்ணூர் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட சூழலி எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் சசி என்று அடையாளம் தெரியவந்துள்ளது. இவருக்கு வயது 45. பகல் முழுவதும் மர வேலை தொடர்பான பணியை  செய்து வந்துள்ளார் சசி. 
 

incidentஆனால் இரவானதும் பெண்களுக்கான உடை அணிந்து அந்த கிராமப்பகுதியில் வலம் வந்துள்ளார். மட்டுமின்றி பெண்கள் போன்று நகைகள் அணிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளார்.அடுத்த சில வாரங்களில் புடவை அணிந்தவாறு ஆளில்லாத நேரத்தில் பேய்களை போன்று சுடுகாட்டில் வளம் வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். பேய் வேடத்தில் வலம் வர தொடங்கிய பிறகுதான் சுடுகாட்டில் படுத்து உறங்குவதை வழக்கமாக தொடங்கியுள்ளார். விடிந்தவுடன் வழக்கம்போல ஆணாக மாறி தன்னுடைய வேலைக்கு சென்று விடுவார். இவரால் அப்பகுதி பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படவில்லை.இவர் இறந்து கிடந்த இடத்திற்கு அருகே விஷ பாட்டில்கள் இருந்துள்ளன. இதனால் சசி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் விறகு எடுக்க வந்த பெண்களே முதலில் சசியின் சடலத்தை கண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சசியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

selfie

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தீவிரமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு; பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Armstrong Case; anjalai Delete  from BJP

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 Armstrong Case; anjalai Delete  from BJP

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அஞ்சலையை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பாதயாத்திரை விபத்தில் பலியான 5 பேர்; நிவாரணத் தொகையை வழங்க அமைச்சர்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
5 lose their live in padayatra accident; Ministers to provide relief amount

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் பலியான 5 பக்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி கிராமம் அருகே நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கண்ணுகுடிப்பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27), மீனா (26), தனலட்சுமி (36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் நடந்து சென்ற சங்கீதா படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணுக்குடிப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.