Skip to main content

இளம் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது...

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Young man arrested for extorting money from a young woman ...

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் பருத்திக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்பிரகாஷ் வயது 21. இவர் தர்மபுரியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். திண்டிவனத்தைச் சேர்ந்த ஒரு பெண், கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் ஒரு நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். சமூக வலைதளம் மூலம் அருள்பிரகாஷுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளனர் இதனால் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்பட்டதையடுத்து காதலர்களாக வலம் வந்துள்ளனர். இப்படி பல இடங்களுக்கும் சென்று இருவரும் நெருக்கமாக இருக்கும்போது, அருள்பிரகாஷ் புகைப்படங்களை எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அருள்பிரகாஷ் ‘நான் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவச் செய்து, அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துவேன். அப்படி நடக்காமல் நிறுத்த வேண்டுமானால் எனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் தர வேண்டும்’ என்று அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த திண்டிவனம் போலீசார், தர்மபுரி சென்று அருள்பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர்.

 

‘இளம் வயது பெண்கள் காதல் என்ற பெயரில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பழகி புகைப்படம் எடுத்துக்கொள்வது, அவர்களை மீறி நெருக்கமாகப் பழகுவது போன்ற காரணத்தினால் அவர்களைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அருள்பிரகாஷ் போன்ற ஆண்கள் உங்கள் புகைப்படங்களை, வீடியோ காட்சிகளை வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்வது போன்ற சம்பவங்கள் ஒரு தொடர் சம்பவங்களாக நடந்துவருகின்றன அதனால் இளவயது பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.