Skip to main content

நேற்று என்.ஐ.ஏ..! இன்று அமலாக்கத்துறை..! பரபரப்பாகும் திருச்சி

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Yesterday the NIA.. today the enforcement department!  Trichy Special Camp Jail!

 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் நேற்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுமார் 13 மணி நேரம் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. 

 

இந்நிலையில், இன்று அமலாக்கத் துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் சிறப்பு முகாமில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத பரிவர்த்தனைகள் குறித்து இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான சிறுவன்; தீவிர தேடுதல் பணியில் மீட்புப் படையினர்

Published on 22/06/2024 | Edited on 23/06/2024
The Mysterious Boy in the Kollidam River; Rescuers in intensive search

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான பத்தாம் வகுப்பு மாணவனை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகில் சுமார் 6 அடி உயர தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் பகுதியில் குளிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் இன்று மதியம் தடுப்பணையில் நிரம்பியுள்ள நீரில் குளிக்க வந்துள்ளார். திடீரென சிறுவன் காணாமல் போன நிலையில் பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மீட்புப் படையினர் தொடர்ந்து சிறுவனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தடை செய்யப்பட்ட போதைப் பொருள்; 38 கடைகளுக்குச் சீல்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
38 shop sealed for selling banned tobacco

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் காவல் ஆணையர் காமினி அறிவுறுத்தலின் பேரில், காவல் ஆணையர் அலுவலகம் மூலமாக மாநகர பகுதியில் உள்ள 13 காவல் நிலையங்களிலிருந்து  72 பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பெறப்பட்டன.

இதனடிப்படையில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு மற்றும் உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டுதலின் பேரில் மாநகர பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகள் அனைத்தும் இன்று  அமைக்கப்பட்ட 9 குழுக்களில் அடங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஆயுதப்படை பிரிவை சார்ந்த காவலர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினர் உள்ளடங்கியோர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 38 கடைகளுக்கு சுமார் ரூ.12 லட்சம் அபராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்; தொடர்ந்து இது போன்ற கடைகள் வரும் நாட்களில் மாவட்டம் முழுவதும் சீலிடப்படும் என்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடைகள் சீல் செய்யப்படும் என்றும் கூறினார்.

இது போன்று பொதுமக்களும், உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் விற்பனை செய்வது கண்டறிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.