Skip to main content

காலபைரவர் கோவிலில் வைகுண்டராஜன் நடத்திய யாகம்! - பின்னணி என்ன?

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

Yagya performed by Vaikuntarajan at Kalabhairava temple!

 

சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த புகாரில் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் கோரப்பட, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

 

Yagya performed by Vaikuntarajan at Kalabhairava temple!

 

இந்நிலையில், தேய்பிறை அஷ்டமி நாளான (6-ஆம் தேதி) இன்று அதிகாலை 4 மணிக்கெல்லாம், விருதுநகர் மாவட்டம் -  காரியாபட்டியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வைரவநாங்கூரில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் திருக்கோவிலுக்கு  வைகுண்டராஜன் வந்தார். அவரது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய போலீஸ்,  அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே பி.கே.லாட்ஜ் என்ற பெயரில் விடுதி நடத்தும் பி.கே.கண்ணன் மற்றும் சிலர் வந்திருந்தனர். திருநெல்வேலியில் இருந்து புரோகிதர் அழைத்து வரப்பட்டு யாகம் நடத்தினார்கள். யாகக் குண்டத்தில் அனைத்து வகையிலான சாதங்களும், பேரிச்சம்பழம் உள்ளிட்ட பழங்களும் போடப்பட்டன. காலை 9 மணியிலிருந்து 10-30 வரையிலான ராகு காலத்தில், ஸ்ரீகாலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர். 11.00 மணிக்கு மேல்தான், கோவிலில் இருந்து கிளம்பினார் வைகுண்டராஜன்.

 

Yagya performed by Vaikuntarajan at Kalabhairava temple!

 

திருநெல்வேலி மாவட்டம், கீரைக்காரன் தட்டு கிராமத்திலிருந்து, விருதுநகர் மாவட்ட ஸ்ரீகாலபைரவர் கோவிலுக்கு வந்து, எதற்காக யாகம் நடத்தினாராம் வைகுண்டராஜன்?

 

அந்தக் கோவில் தரப்பில் “தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கினால் எதிரிகள் பலமிழப்பார்கள். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் பலப்படும். ஆபத்திலிருந்து காப்பதற்கே தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடத்தப்படுகிறது. அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. மேலும், தேய்பிறை அஷ்டமியானது மரண பயத்தைப் போக்கும் அற்புதமான வழிபாடாகும். சிவாலயங்கள் அனைத்திலும், திறக்கும்போதும், இரவில் கோவிலை மூடும்போதும், பைரவ பூஜை நடக்கும். சிவன் சொத்துகளை காவல் காக்கும் அதிகாரியாகவும், நாயை வாகனமாகக் கொண்டு திகம்பரராகக் காட்சி தருபவராகவும் ஸ்ரீகால பைரவர் இருக்கிறார். இவரே, கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பல்வேறு ரூபம் கொண்டவராகத் திகழ்கிறார்” என்று பரவசத்துடன் கூறினார்கள்.

 

Yagya performed by Vaikuntarajan at Kalabhairava temple!

 

கொலை மிரட்டலைத் தொடர்ந்து,  தனது குடும்பத்தாரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருநெல்வேலி டிஐஜி அலுவலகத்தில் வைகுண்டராஜன் புகார் தர, பாதுகாப்புக்காக சுழற்சி அடிப்படையில், ஆயுதம் தாங்கிய போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிரிகள் பலமிழந்து, வைகுண்டராஜன் பலம் பெறுவதற்காகவே நடத்தப்பட்டுள்ளது இந்த யாகம்!


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.