காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று தந்த மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை பதவி நீக்கம் செய்வதுடன், அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் உள்ள சாஸ்திரி பவன் முன்பு இன்று காலை 11 மணியளவில் பாஜக எம்பி பிரிஜ்பூஷண் சரண் சிங்கை உடனடியாக கைது செய்யக்கோரி எஸ்எப்ஐ (SFI), ஏஐடிடபுல்யூஏ (AIDWA) மற்றும் டிஒய்எப்ஐ (DYFI) அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.