Skip to main content

உலக சுற்றுச்சூழல் தினம்; உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவர்கள்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

world environmental day celebrated trichy

 

தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக  சுற்றுச்சூழல் தின விழா ‘பிளாஷ்டிக் எனும் எமன்’ என்னும் விழிப்புணர்வு கையேடு வழங்குதல் மற்றும் துணிப்பை பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி  ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது தமிழன் சிலம்பம் பாசறை மாணவர்களிடையே மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் தலைமையில் நடைபெற்றது.

 

அப்போது அவர் பேசுகையில், "2023 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் 'பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வதற்கு உரியத் தீர்வுகள்' ஆகும். இந்த கருப்பொருளை வலியுறுத்தும் விழிப்புணர்வுபடி நாம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, பிளாஸ்டிக் மாசு ஏற்படாமல் காக்க வேண்டும். சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பெருகி வரும் மக்கள் தொகையாலும் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி மேலும் மேலும் இந்த பூமியில் `சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமானால் இந்த பூமியில் வாழும் உயிரினங்களுக்குத் தான் ஆபத்து விளைவிக்கும்.

 

சுற்றுச்சூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வுக்கு அவசியமானது. இந்த சம நிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும். நம்மைச் சுற்றியிருக்கும் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி முன்னோர் வழிபட்டதால், அவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை அவர்களுக்கு இயல்பிலேயே இருந்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்று பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது. அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்" என்றார்.

 

தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் மாணவர்களிடையே பிளாஸ்டிக் தீமை குறித்தும் பல்லுயிர் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து நீர்நிலைகளில் மண்டிக் கிடக்கும் நெகிழிகள், சிற்றுயிர்கள் தொடங்கி பேருயிர்கள் வரை ஏற்படுத்தும் தீங்குகளை எடுத்துரைத்து நெகிழிப் பயன்பாடுகளின் பெருந்தீமை குறித்து உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். நிகழ்வில் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. ஆர்.கே. ராஜா, சாத்தனூர் குமரன், ஆசான் கார்த்திக், சந்தியா, ஹேமா, சர்மிளா, அகிலா உள்ளிட்ட சிலம்பம் மாணவர்கள் பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.